மதுராந்தகம் அருகே ஆசிரியர் வீட்டில் 75 சவரன் நகை மற்றும் 55 ஆயிரம் ரூபாய் கொள்ளை

மதுராந்தகம் அருகே ஆசிரியர் வீட்டில் 75 சவரன் நகை மற்றும் 55 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள். இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார், நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவிலிருந்த 75 சவரன் நகை மற்றும் 55 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Posts