மதுரையில் தங்க தமிழ்ச்செல்வன், தங்கியிருந்த விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர்  திடீர் சோதனை

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு, மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்து, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, பரிசு பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை பதுக்கி வைத்திருப்பதாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள், ஒருமணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் எந்த பொருளும் கிடைக்காமல், தேர்தல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்

Related Posts