மதுரையில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்

 

 

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மீனாட்சி    சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

மதுரை, ஏப்ரல்-27 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள், திருப்பரங்குன்றம் முருகன் – தெய்வானை ஆகியோர் மணமேடையில் எழுந்தருளினர். சரியாக 9.25 மணிக்கு மிதுன லக்கனத்தில் சுந்தரேசுவரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணை, சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் தங்களின் தாலிக்கயிறை மாற்றிக் கொண்டனர்.

திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி – சுந்தரேசுவரர் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினர். அங்கு அவர்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான நாளை காலை தேரோட்டம் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் தேவேந்திரர் பூஜையுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Posts