மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரழப்புக்கு சுகாதரத்துறை அலட்சியமே காரணம்: முக ஸ்டாலின் 

Want create site? Find Free WordPress Themes and plugins.

மதுரையில், நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், அப்பகுதியில் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்த்தில்  மின்சாரம் தடைப்பட்டது. இதே போல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்ட்து. இதனால் பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா, வில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன், ஒட்டன்சத்திரம் பழனியம்மாள் ஆகியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு  அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  மேலும் இரண்டு நோயாளிகள் உயிரிழந்த்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தகவல் தெரியவந்ததும்  மருத்துவமனையில் இருந்த  நோயாளிகளின்  உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், 5 பேரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மின்தடையால் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு சுகாதரத்துறை அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமது  சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் அப்பாவிகள் உயிரிழந்திருப்பது கவலை அளிப்பதாகவும், இதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு  நீதியும் நிவாரணமும் தேவை என  அவர் பதிவிட்டுள்ளார்.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts