மதுரை அருகே கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான 47 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்


தமிழகத்தில் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மதுரை அய்யர்பங்களா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக  வேகமாக வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது வேனுக்குள் பெட்டி, பெட்டியாக தங்க கட்டிகளும், நகைகளும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வேனில் இருந்த 47 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.விசாரணையில் சேலத்தில் உள்ள நகை கடைகளுக்கு  தங்கம் கொண்டு செல்லப்பட்ட்து தெரியவந்த்து.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வாகனத்தை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதேபோல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ராஜவீதி பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் தேர்தல் பறக்கும்படையினர் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 1கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

Related Posts