மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் நடைபெற்ற வைகாசி தேரோட்டம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மதுரை : மே-29

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கூடலழகர் பெருமாள், காலையில் திருபல்லக்கிலும், இரவில் அன்னம், சிம்மம் மற்றும் சேஷ வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேரில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூகசுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Posts