மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது

உலகப் பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று  காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி பட்டாபிஷேகம்  வரும் 15-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் 8.24-க்குள் நடைபெறும். 16-ம் தேதி திக்குவிஜயமும்,. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 17-ம் தேதி காலை 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்குள்நடைபெறுகிறது.  18-ம் தேதி காலை 5.45 மணிக்கு தேரோட்டமும், 19-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திரர் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. தேரோட்டம் நடைபெறும் 18-ந் தேதி அன்று மக்களவைத் தேர்தலும் நடைபெறுவதால் காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Related Posts