மதுரை சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு விசாரணை

 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசியை நிர்மலாதேவியிடம், சந்தானம் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை, ஏப்ரல்-26 

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த தகவலின்பேரில், கைது செய்யப்பட்டுள்ள காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று காலை 9.25 மதுரை சிறைக்குச் சென்ற சந்தானம் மற்றும் பெண் விசாரணை அதிகாரிகள் தியாகேஸ்வரி, கமலி ஆகியோர் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையை பதிவு செய்ய வீடியோ ஒளிப்பதிவாளர் ஒருவரையும் அவர்கள் அழைத்துச் சென்றனர். 

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடி காவல்துறைக்கு அனுமதி வழங்கி, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts