மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்

புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகைப்படங்கள் வெளியானதை அடுத்து மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிரடி சோதனை நடத்திய காவல்துறை அதிகாரிகள், தண்டனை கைதிகளின் அறைகளில் இருந்த தொலைக்கர்ட்சிப் பெட்டிகள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புழல் சிறையின் 5 தண்டனை கைதிகள் தமிழகத்தின் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இதனிடையே மதுரை மத்திய சிறையில் போலீசார் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காவல் உதவி ஆணையர், 2 ஆய்வாளர்கள் தலைமையில் 150 போலீசார் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக கடந்த 16-ந் தேதி சேலம், கோவை மற்றும் கடலூர் சிறைகளிலும், 19-ந் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சிறைகளில் தடை செய்யப்பட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

Related Posts