மதுரை மாவட்டம் பெருங்குடியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தீவிரம்

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் மதுரை மாவட்டம் பெருங்குடியில் உள்ள விருசம்மரத்தூரில்  ஊரணி சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு நூலக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை , நீர்வள ஆதார துறை மூலமாக மழைநீர் சேகரிப்பை செயல்படுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறது. அந்த வகையில், அனைத்து கிராமங்களிலும் , ஊராட்சிகளிலும் உள்ள ஊரணிகளை சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருங்குடியில் உள்ள விருசம்மரத்தூர் ஊரணியில் உள்ள குப்பைகள்,  முட்செடிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்கும் பணி வெகு விரைவாகவும் தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் பெருங்குடி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நீர்வள ஆதாரம் பெருகி விவசாயம் செழிக்கும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts