மதுரை: வாடிப்பட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் பலி

 

 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கல்குவாரியில், மண்சரிவில் சிக்கி 3 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை, மே-01 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டியில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இன்று காலை, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கல்குவாரியின் ஒரு பகுதியில் திடீரென மண்சரிந்து, தொழிலாளர்கள் மீது விழுந்தது. மண் குவியலில் சிக்கிய பரமசிவம், கிருஷ்ணன், நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து, வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Posts