மத்தியப்பிரதேச முதல் அமைச்சரின் அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை

மத்தியப்பிரதேச மாநிலத்தில்  முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.முதல் அமைச்சரின்  சிறப்பு பணி அதிகாரியாக பிரவீன் காக்கர் என்பவர் பணியாற்றி வருகிறார்.  இவரது இல்லம் தலைநகர் போபாலில் உள்ள விஜய்நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் இருந்து 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை சென்று சோதனை நடத்தி வருகிறது. . இதேபோல், போபால், இந்தூர், கோவா மற்றும் டெல்லி உள்பட 50க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன ர்.

Related Posts