மத்தியரசு, மின் சீரமைப்பு பணிக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு: அமைச்சர் தங்கமணி

கஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக மத்திய அரசு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கஜா புயலால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல்,சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தென்னைமரங்கள் அடியோடு சாய்ந்தன. ஆடு, மாடுகள் வெள்ளம் மற்றும் தென்னைமரங்களில் சிக்கி உயிரிழந்தன ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மீனவர்களின் படகு, வலைகள் சேதமடைந்தன டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி 13 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் தேவை எனவும், உடனடியாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு முதற்கட்டாக மின் சீரமைப்பு பணிக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Related Posts