மத்தியஸ்தம் தேவையில்லை : டிரம்ப்புக்கு இந்தியா பதில்

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா பதிலளித்துள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார். அப்போது காஷ்மீர் விவகாரம் பெரிய பிரச்னையாக  உருவெடுத்திருப்பதால், இதில் தலையிட வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இருப்பதாக தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் உதவ தயாராக இருப்பதாகவும், இந்தியா ஒப்புதல் அளித்தால்  மத்தியஸ்தம் செய்ய முடியும் என்றும் கூறினார். காஷ்மீர்  விவகாரத்தில் தம்மால் நிச்சயம் நல்ல மத்தியஸ்தராக இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றார். இது அனைவருக்கும் தெரியும் என்றும், இதனையே கடந்த காலங்களிலும்  கூறியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts