மத்தியில் அரசு அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பரோபிஷாவில் பிரசாரம் மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாட்டு மக்களை காப்பாற்ற பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய அரசை அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் என்றும் அவர் கூறினர். பிரதமர் மோடி 5 ஆண்டுகளாக பொய் மட்டுமே பேசி வருவதாக குறிப்பிட்ட அவர், 2014 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார். சொந்த மனைவியை கவனிக்க முடியாதவர் எப்படி நாட்டு மக்களை கவனிக்கப் போகிறார்? என அவர் கேள்வி எழுப்பினார். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தம் மூலம் இந்த நாட்டின் சட்டப்பூர்வ குடிமக்களை அகதிகளாக மாற்ற பாரதிய ஜனதா முயற்சி செய்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.

Related Posts