மத்தியில் காங்கிர்ஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு 6ஆயிரம் வழங்கப்படும்:ராகுல்காந்தி

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கொங்கு நாடு மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பன்முக கலாச்சாரத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதாக தெரிவித்தார்.

பிஜேபியின் தேர்தல் அறிக்கை மூடிய அறைக்குள் தயாரிக்கப்பட்டதாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க வெளிப்படையாக இந்திய மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக தெரிவித்தார். தமிழ் மொழியை, தமிழர்களை மதிப்பதாக பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று தெரிவித்தார். இந்தியா முழுவதும் உள்ள 20 சதவீத ஏழை மக்களை கணக்கெடுக்கப்பட்டு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 

Related Posts