மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்:  ப.சிதம்பரம் 

கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமியை ஆதரித்து கருமத்தம்பட்டியில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,  தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை மூன்று நிமிடங்களில் முடிவுற்றதாகவும், 1971 இல் அமைந்த்திலிருந்து ஆறு முறை திமுககாங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகள் நெருக்கமாக, இணக்கமாக, புரிந்துகொண்டு இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும் என்று குறிப்பிட்ட அவர்,
தமிழகத்தில் மோடிக்கு எதிர்ப்பு அதிக அளவில் உள்ளதாக கூறினார். ஹிந்தியை திணிக்க பாஜக முயற்சி செய்வதாகவும், ஒரே நாடு, ஒரே மதம் என்ற கொள்கையை அக்கட்சி பின்பற்றி வருவதாக தெரிவித்தார். மத்தியில் விரைவில் திமுககாங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் எனவும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவற்றை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts