மத்தியில் நிலையான ஆட்சி அமைய தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி

கோவை ராஜவீதி தேர்நிலை திடல் பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோவை மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,

மத்தியில் நிலையான ஆட்சி அமையவேண்டும் எனவும், அதற்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் சி.பி்.ராதாகிருஷ்ண்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். திறமையான ,வலிமையான, நாட்டை பாதுகாக்க கூடிய பிரதமராக மோடி இருப்பார் என கூறிய அவர்,

நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம் எனவும் மோடியால் மட்டுமே பாதுகாப்பை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசுடன் இணைந்து அதிமுக முயற்சி செய்யும் எனவும்,627 ஏக்கர் பரப்பளவில் விமான நிலைய விரிவாக்கம், ஆத்துபாலம் மேம்பாலம் , திருச்சி சாலை மேம்பாலம் போன்ற திட்டங்கள் இந்த அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

Related Posts