மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால், சட்டப்பிரிவு 370 ன்படி காஷ்மீருக்கு  வழங்கப்பட்டுள்ள சிறப்பு தகுதிகள் நீக்கப்படும்:   அமித் ஷா 

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, காஷ்மீருக்கு தனி பிரதமர் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேச துரோகம் தொடர்பான சட்டத்தைத் திருத்துவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனை தமது பேச்சில் சுட்டிக் காட்டிய அமித் ஷா, மோடி மீண்டும் பிரதமரானால் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்றார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது,பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் 5 பேரின் தலையை வெட்டி கொடூரத்தை அரங்கேற்றிய போது எந்தவித பதிலடியும் தரப்படவில்லை என்று கூறிய அமித் ஷா, மோடி ஆட்சியில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் வான் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

Related Posts