மத்தியில் மோடி ஆட்சியையும், மாநிலத்தில் பேடி ஆட்சியையும் அகற்ற வேண்டும்

மத்தியில் மோடி ஆட்சியையும், மாநிலத்தில் பேடி ஆட்சியையும் அகற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

        அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளை கண்டித்து தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் எனவும், மத்திய ஆட்சிக்கு முடிவு கட்டவும் தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தான், திமுக தலைவராக பதவியேற்ற பின்பு பங்கேற்கும் முதல் போராட்டம் இது என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் இருக்கும் ஆட்சியை அகற்றும் வரை தனது போராட்டம் தொடரும் என்றார்.  தற்போது இருக்கும் அரசு பதவி விலக வேண்டும் என அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் நினைப்பதாக அவர் தெரிவித்தார்.மத்தியில் இருக்கும் மோடி ஆட்சியும், மாநிலத்தில் இருக்கும் பழனிசாமி ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் எனவும், வரலாற்றில் இப்படி ஒரு ஊழல் அரசை தமிழக மக்கள் இதுவரை பார்த்து இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.  மத்தியில் மோடி ஆட்சியையும் மாநிலத்தில் பேடி ஆட்சியையும் அகற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்..

         இதேபோல்,சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் ஊழல்களை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  ஜே. அன்பழகன்,  தலைமையில் நடைபெற்ற இந்த கண்டனஆர்பாட்டத்தில்  குட்கா ஊழலில்  சிபிஐ விசாரணையில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர்,காவல் துறை டி ஜி பி ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான ஜே. அன்பழகன்,  தலைமையில் நடைபெற்ற இந்த கண்டனஆர்பாட்டத்தில் மு க தமிழரசு ,  ரகுமான்கான்,  உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி மு க வினர்  கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜே அன்பழகன், குட்கா ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் , தமிழக காவல்துறை டி ஜி பி ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

         திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பாஜகவுடன் திமுக ரகசிய உறவு என தம்பிதுரை பேசி வருவதை சுட்டிக் காட்டி, திமுக பக்கம் உள்ள சிறுபான்மை மக்களை திசைதிருப்பவே தம்பிதுரை இப்படி பேசி வருகிறார் என தெரிவித்தார்.

         முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசும் போது மத்திய, மாநில அரசுகளின் வரியால் பெட்ரோல், டீசல் விலை சதம் அடித்துவிடும் போல் உள்ளது என கூறினார்.

          ஈரோடு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துச்சாமி தலைமையில்  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

          கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக அரசின் ஊழலை கண்டித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Related Posts