மத்தியில் வலிமையான ஆட்சி அமைய அதிமுகக்கு ஆதரவளிக்க வேண்டும்:எடப்பாடி பழனிசாமி

 சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணி கொள்கையோடு சேர்ந்துள்ள கூட்டணியாக உள்ளதாகவும் நாட்டில் நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராகவேண்டும் என்று தெரிவித்தார்.

மத்தியில் நிலையான ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்துக்கு தேவையான நிதியை கேட்டுப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் காவிரி கோதாவரி இணைப்பிற்கு முதலில் குரல் கொடுக்கப் படும் என்றும் இரண்டு இரண்டு நதிகளை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Related Posts