மத்திய அமைச்சராக இருந்துகொண்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பற்றி விமர்சிப்பது சரியாக இருக்காது

மத்திய அமைச்சராக இருந்துகொண்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பற்றி விமர்சிப்பது சரியாக இருக்காது என, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி : ஜூன்-22

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை வள்ளிநாயகபுரத்தில் அமைக்கப்பட்ட, ஆழ்துறை கிணற்றுடன் கூடிய தொட்டி மற்றும் ஓடை பாலம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, தண்ணீர் தொட்டி, ஓடை பாலத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். தமிழகத்தில் என்றைக்கும் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Posts