மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவு: 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு

   மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

பெங்களூருவில் உள்ள தனியார்  மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்றும் நாடாளுமன்றவிவகாரங்கள் துறை அமைச்சர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் காலமானார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.. பின்னர்,தேசிய கல்லூரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.  மேலும், அனந்த குமார் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும், அவருக்கு அரசு முழு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Posts