மத்திய அரசின் அடிமையாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது

மத்திய அரசின் அடிமையாக தமிழக அரசு, செயல்பட்டு வருவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

         ஈரோட்டில், இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சியின், மாநில அருந்ததியர் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய டிடிவி.தினகரன், ஜெயலலிதா, உயிரோடு இருந்தவரை மக்கள் விரும்பாத, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட எந்த திட்டங்களையும் மத்திய அரசால் தமிழகத்தில் செயல்படுத்த முடியவில்லை என குறிப்பிட்டார். ஆனால், அம்மாவின் பெயரால் தற்போது ஆட்சி நடத்துபவர்கள் மத்திய அரசுக்கு கை கட்டி, அடிமைகளாக சேவை செய்வதாகவும், ஜெயலலிதாவின் பாதையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி சென்றுவிட்டனர் என்பது மக்களுக்கு தெரியும் என அவர் கூறினார்.

Related Posts