மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்

 

 

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 20 ஆம் தேதி விவாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் முழுமையாக முடங்கிய நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. மக்களவை கூடியதும், முதலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி காங்கிரஸ், தெலுங்குதேசம், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்கட்சிகளைச் சேர்ந்த 50 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொண்டதையடுத்து, வரும் 20 ஆம் தேதி விவாதம் நடத்தப்படும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

Related Posts