மத்திய அரசுக்கு 1 புள்ளி 76 லட்சம் கோடி ரூபாய் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்

முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் அறிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு 1 புள்ளி 76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

நிதி பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியிடம் உள்ள உள்ள உபரி நிதியை அரசுக்கு வழங்க வேண்டும் என்று விரும்பியது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் பொருளாதார முதலீடு கட்டமைப்பு  எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் 6 உறுப்பினர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.

பல்வேறு வகையிலான மதிப்பீடுகளின்படி, ரிசர்வ் வங்கியிடம் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதி உள்ளது. ரிசர்வ் வங்கி தன்னிடம் எந்த அளவுக்கு உபரி நிதியை வைத்துக் கொள்ளலாம், எவ்வளவு நிதியை மத்திய அரசுக்கு கொடுக்கலாம், அதற்கான கால வரையறை என்ன என்பது குறித்து, பிமல் ஜலான் குழுவின் கடைசி ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி டிவிடெண்ட் மற்றும் கூடுதல் உபரித் தொகையான 1 புள்ளி 76 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் அறிக்கையை ஏற்று ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது.

Related Posts