மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது

மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ப. சிதம்பரத்தின் மகனுமாக கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தை டில்லியில் அவரது இல்லத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இது குறித்து சென்னையில் பேட்டி அளித்த கார்த்திக் சிதம்பரம், மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது என்று தெரிவித்தார்.  இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் இது சம்பந்தமாக 20 முறை தனக்கு சம்மன் அனுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

ஐ.என்.எக்ஸ் . வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறிய அவர், யாரையோ திருப்திபடுத்தவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாகவும், வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று தெரிவித்தார்.

Related Posts