மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க மறுப்பு

காவிரி விவகாரத்தில் கூடுதல் அவகாசம் கோருவது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

டெல்லி : மே-02

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு செயல் திட்டத்தை உருவாக்க மத்திய அரசு அவகாசம் கேட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், மே 3-ம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோருவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள  மனுவை அவசர வழக்காக உடனடியாக  விசாரிக்கும்படி மத்திய அரசின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

Related Posts