மத்திய அரசு மக்களின் வளர்ச்சியையும் கணக்கில் கொள்ள வேண்டும்

மத்திய அரசு நாட்டின் வளர்ச்சியை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மக்களின் வளர்ச்சியையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். திரையரங்குளில் ஆன் லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை என்ற தமிழக அரசின் முயற்சியை அவர் வரவேற்றுள்ளார்.

ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், அந்தந்த பிராந்திய மொழிகளில் தீர்ப்புகள் வருவது நல்லதுதான் என அவர் கருத்து கூறினார். திருப்பூரில் வரும் 15-ம் தேதி தேமுதிக முப்பெரும் விழா நடைபெற இருப்பதாகக் கூறிய பிரேமலதா, கட்சி துவங்கி 15 வது ஆண்டு நடைபெறுவதால் விஜயகாந்த் தலைமையில் அதனை சிறப்பாக கொண்டாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Posts