மத்திய அரசு மீது கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவுகளை மறைப்பதற்காகத்தான்,  தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என பெரிது படுத்தப்படுவதாக மத்திய அரசு மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கடுமையாகக் கண்டித்தார். இந்திய பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது என்று கூறிய கே.எஸ்.அழகிரி, இந்தியாவில் இருந்து அன்னிய மூலதனம் வெளியேறி வருவதாகக் குறிப்பிட்டார்.  பொருளாதார சீரழிவுகளை மறைப்பதற்கு தான், தீவிரவாதிகள் வந்து விட்டார்கள், என்று பெரிதுபடுத்துப்படுவதாகக் கூறிய கே.எஸ்.அழகிரி, மக்களை நீண்ட காலத்திற்கு ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.

Related Posts