மத்திய அரசு ஹிந்தியை திணிக்காது என உறுதி : போராட்டம் ஒத்திவைப்பு

இந்தி திணிப்பை எதிர்த்து 20-ஆம் தேதி திமுக நடத்தவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ஹிந்தியை எந்த நிலையிலும் திணிக்காது என ஆளுநர் உறுதியளித்துள்ளதாக கூறினார். இதனை ஏற்று வரும் 20-ந் தேதி திமுக நடத்தவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.  எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்டால் அதனை திமுக எதிர்க்கும் என்றும் ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.

Related Posts