மத்திய அரசையும்,மாநில அரசையும் வீழ்த்திக் காட்டுவதே திமுகவின் இலக்கு: ஸ்டாலின்

மக்கள் விரோதமாகச் செயல்படும் மத்திய அரசையும்,மாநில அரசையும் வீழ்த்திக் காட்டுவதே திமுகவின் இலக்கு என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  120 கோடி மக்களைக் கொண்ட நாட்டின் வலிமையைப் பலவீனப்படுத்தும் அனைத்து வேலைகளையும் சமூக,பொருளாதார, கல்வி, மொழி, வாழ்வுரிமை உள்ளிட்ட பல தளங்களிலும் மத்திய அரசு செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் வாழும் அந்தந்த மொழி பேசும் தேசிய இனங்களின் மீது அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனவே, மத்திய, மாநில அரசுகள் இரண்டையும் வீழ்த்துவதே ஜனநாயக இயக்கமான திமுகவின் இலக்கு என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Posts