மத்திய அரசை எதிர்த்து போராட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயங்குகிறார்

மத்திய அரசை எதிர்த்து போராட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயங்குவதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறியுள்ளார்.

                திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவணியாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளர், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை பொறுத்தவரை அரசின் முடிவை ஆளுனர் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய பாரத்பந்தில் தி.மு.க. பங்கேற்றும் பிசுபிசுத்து போனது எனவும், மத்திய அரசை எதிர்த்து போராட மு.க.ஸ்டாலின் தயங்குவதே இதற்கு காரணம் எனவும் தெரிவித்தார். பாரத ரத்னாவா அல்லது  பாரத் பந்த் வேண்டுமா? என்றால் பாரத ரத்னா கருணாநிதிக்கு தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் எனவும், ஜி.எஸ்.டி. வந்த பின் மாநில அரசு நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருப்பதகாவும் தம்பிதுரை தெரிவித்தார். ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருப்பதற்கு தேர்தல்தான் காரணம் எனவும், அதனால் அந்த மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடு செய்யும் எனவும், ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி இதுவரை வழங்கப்படவில்லை எனவும் தம்பிதுரை கூறினார்.

Related Posts