மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சேலம் இரும்பு உருக்கு ஆலையை தனியார் வசம் தாரை வார்க்க மத்திய பாரதிய ஜனதா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சேலம் இரும்பாலை தனியார் மயமாக்குவதை கண்டித்து  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், முன்னாள் மாநில தலைவர் கேவிதங்கபாலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய  கேஎஸ் அழகிரி,  சேலம் உருக்கு ஆலையை தனியார் வசம் தாரை வார்க்க மத்திய பாரதிய ஜனதா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Related Posts