மத்திய கல்வி திட்டத்திற்கும் மாநில கல்வி திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள் நீக்கினால் தமிழக மாணவர்கள் பயன் பெற முடியும்

மத்திய கல்வி திட்டத்திற்கும் , மாநில கல்வி திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள் நீக்கினால் தான் தமிழக மாணவர்கள் பயன் பெற முடியும்  என அப்துல்கலாமின் அறிவியல்  ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் உள்ள தனியார்  மண்டபத்தில் மாணவ மாணவிகளுக்கான உலகளாவிய போட்டித் தேர்வு குறித்த விழிப்புணர்வு ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பொன்ராஜ் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் தேர்வுகளுக்கு படிக்கும் பொழுது புத்தகத்தை நினைவுகூர்ந்து மனதில் புரிந்து கொண்டு படிக்க வேண்டும்  என தெரிவித்தார்

Related Posts