மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க  காங்கிரஸ் கட்சிக்கு அம் மாநில ஆளுநர் ஆனந்தி பட்டேல் அழைப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க  காங்கிரஸ் கட்சிக்கு அம் மாநில ஆளுநர் ஆனந்தி பட்டேல் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத்  தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் வசம் 4 தொகுதிகள் உள்ளன. மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.பெரும்பான்மையை நெருங்கியுள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்த அவர், மக்கள் பாஜகவுக்கு எதிராக இருப்பதையே சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் காட்டுவதாக தெரிவித்தார்.    காங்கிரஸ் கட்சியின் கொள்ளைகள் பலவற்றில் தங்களுக்கு உடன்பாடு இல்லாதபோதிலும்,மத்திய பிரதேசத்தில் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் மாயாவதி கூறினார். இதனிடையே, மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கும்படி காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் இன்று அவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர்.

Related Posts