மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் வரும் திங்களன்று பதவி ஏற்க உள்ளார்

மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் வரும் திங்களன்று பதவி ஏற்க உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற காங்கிரஸ் பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதலமைச்சர் பதவிக்கு மூத்த தலைவர் கமல் நாத் மற்றும் ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே கடும் போட்டி நிலவியது.

முதலமைச்சர் பதவியை குறிவைத்து இருவருமே காய் நகர்த்தியதால் டெல்லியில் ராகுல் காந்தி – சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் கமல் நாத்தை முதலமைச்சராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக போபால் திரும்பிய கமல்நாத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக கமல் நாத் தேர்வு செய்யப்பட்டார்.இன்று காலை மத்தியபிரதேச ஆளுநரை சந்தித்து கமல் நாத் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். ஆளுநர் அழைப்பு விடுத்த பிறகு வரும் திங்களன்று கமல்நாத் மத்தியபிரதேச முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறார்.

Related Posts