மத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டும் என்ற உறுதியை மக்கள் ஏற்றுள்ளனர்: மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டும் என்ற உறுதியை மக்கள் ஏற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும்  பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி என்றும், எடப்பாடி பழனிசாமி ஒரு உதவாக்கரை என்று விமர்சனம் செய்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரே நிமிடத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு அகற்றப்படும் என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின், வன்னியர் சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு அளித்தவர் கலைஞர் என்று 2006-ல் ராமதாஸ் பாராட்டியதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

Related Posts