மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் 234 தொகுதிகளிலும் கண்டன பொதுகூட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் 234 தொகுதிகளிலும் கண்டன பொதுகூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

            சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்ந்து பாராட்டியவர்கள் இப்போது மகாத்மா காந்தியின் புகழ் பாடுவதாகவும், இந்த மனமாறுதல் வாக்கு வாங்குவதற்காக இருக்கக்கூடாது என கூறினார்.  நடிகர் விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டதில் எந்த தவறும் இல்லை எனவும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என தெரிவித்த அவர், கட்சி தொடங்கி எம்.எல்.ஏ., அமைச்சர் ஆவதை விட முதலமைச்சர் ஆக வேண்டும் என்று யோசிப்பது உயர்ந்த சிந்தனை தான் என கூறினார்.  மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு செயல்படுத்த கூடாது என வலியுறுத்திய திருநாவுக்கரசர், தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சி மற்றும் மத்திய அரசை கண்டித்து 234 தொகுதிகளிலும் இம்மாதம் 3வது வாரத்தில்  பொதுகூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Related Posts