மத்திய மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது: ஆ.இராசா

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒன்றிய பகுதிகளில் திமுக பாராளுமன்ற வேட்பாளர் ஆ. இராசா தீவிரபிரச்சாரம்  செய்தார். சேலாஸ்,பழத்தோட்டம்,அருவங்காடு ,பாய்ஸ்கம்பெனி,பெட்டட்டி சுங்கம்,இளித்துரை,எடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார் ….

அப்போது பேசிய அவர்,  அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை  பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப் படும் என்று தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது என்று அவர் கூறினார்.

Related Posts