மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெடித்தது

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக, தனது முதல் விண்கலமான க்ரு டிராகனை அறிமுகம் செய்தது. விண்கலத்தின் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்ததால், அதில் பயணிக்கும் விஞ்ஞானிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் சென்று வர திட்டமிடப்பட்டது. இதற்காக விண்கலத்தை கேப் கனரவல் ஏவுதளத்தில் வைத்து மீண்டும் சோதனை செய்தனர். அப்போது, திடீரென விண்கலம் வெடித்து சிதறியது. விண்கலம் வெடித்து சிதறியதை அமெரிக்காவின் எம்பியும், நாசாவுக்கான பட்ஜெட் கமிட்டி தலைவருமான ரிச்சர்டு ஷெல்பி உறுதி செய்துள்ளார்.

Related Posts