மனித உரிமைகளுக்காக போராடும் சில அமைப்புகளை தடை செய்ய முயற்சி

மனித உரிமைகளுக்காக போராடும் ஒரு சில அமைப்புகளை தடை செய்ய முயற்சி நடைபெறுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை : மே-16

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜனநாயக உரிமைகளை மீட்பதற்கான அறப்போர் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக நிர்வாகி வி.பி. துரைசாமி, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன், முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளை தடை செய்ய அரசுகள் முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதுபோன்ற பாசிச நடவடிக்கைகளை வேறோடு அறுத்தெறிவோம் என்று வைகோ எச்சரித்தார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரும் இந்த அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Related Posts