“மன் கி பாத்” வழியே நல்ல எண்ணத்தை உருவாக்க முடியும்: பிரதமர் நரேந்திர மோடி

 

மன் கி பாத் நிகழ்ச்சி வழியே மக்களிடையே நல்ல எண்ணத்தினை உருவாக்கும் உணர்வை ஏற்படுத்த முடிந்த்தாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார்.  கடந்த2014ம் ஆண்டு அக்டோபரில் ஞாயிற்று கிழமை அன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்று 50வது பகுதியை எட்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்று கிழமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்று பேசிய பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சி வழியே மக்களிடையே நல்ல எண்ணத்தினை உருவாக்கும் உணர்வை ஏற்படுத்த முடிந்ததாக கூறினார்.. இதில் கேட்பது தனது குரலாக இருந்தாலும் இதில் வெளிப்படும் உணர்வுகள் மற்றும் மனநிலை ஆகியவை பொதுமக்களுடையது எனவும்,.  இதன் வழியே வெளியிடப்படும் அனைத்து ஆலோசனைகள் மற்றும் தகவல்கள் தனக்கு உடனே வந்து சேருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். பொதுமக்கள் இதில் ஆர்வமுடன் பங்கேற்று வருவதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட மோடி,  சமூக செயல்பாடுகளை எடுத்து காட்டும் ஒரு நிகழ்ச்சியாக மன் கி பாத் நிகழ்ச்சி அமைந்து வெற்றிகரமுடன் செல்வது திருப்தி அளிப்பதாக கூறினார் 

 

Related Posts