மரங்களை கொல்லும் புது எதிரி

தான் உயிர் வாழ்வதற்காக, மற்றவர்களின் உயிரையும், அவரது ஒட்டுமொத்த வளர்ச்சியையும் எடுத்துக் கொண்டு, தனக்குத் தேவையான உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஜீவராசிகள் பாராசைட்( Parasite ) எனப்படும்.

சாதாரண பாராசைட் செடிகளோ, அல்லது கொடிகளோ, தனக்கு உணவு கொடுக்கும் மரங்களின் ஊட்டச்சத்தை மட்டும் உறிந்துக் கொண்டு, அந்த மரங்களின் வளர்ச்சியைத் தடுக்குமே ஒழிய, அந்த மரங்களை அழிக்காது.

ஆனால், ஒரு காளான் எப்படிப் பட்ட பெரிய மரத்தையும் அழித்து, அங்கு தன் ராஜ்ஜியத்தை நிலை நாட்டும் என்றால் நம்புவீர்களா?

உலகில் இருக்காத பல அதிசய உயிர் கொல்லும் செடிகள் நிறைந்திருக்கும் அமெரிக்காவின், கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகளில், ஆச்சிரியம் தரக்கூடிய ஓர் உயிரினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அது ஆர்மிலாரியா ஆஸ்டோய் (Armillaria Ostoyae) என்ற தேன் காளான்.

ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளின் படி, கண்ணுக்கே தெரியாத ஒரே ஒரு வித்திலிருந்து உருவாகிய இவ்வகை காளான்கள், இன்று, 2,200 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கின்றன.

1988ம் ஆண்டு வனத்துறையைச் சேர்ந்த க்ரெக் விப்பில் என்பவரால் முதன் முறையாக இந்த வகை காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

Related Posts