மராட்டியத்தில்  நாளை மாலையுடன் தேர்தல் நிறைவு:  மோடி,  ராகுல் காந்தி இன்று பரப்புரை   

 

மராட்டிய மாநிலத்தில் மொத்தமுள்ள  48 மக்களவைத் தொகுதிகளுக்கும் 4 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 11-ந் தேதி 7 தொகுதிகளுக்கும், 18-ந் தேதி 10 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 14 தொகுதிகளுக்கும் என மொத்தம் 31 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.  இந்நிலையில் 4-வது மற்றும் இறுதிக்கட்டமாக வட மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, நந்துர்பர், , ஷீரடி உள்ளிட்ட 17 தொகுதிகளுக்கு வரும் 29-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இதேபோல். கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 17 தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது. மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் பாஜக- சிவசேனா கூட்டணி கட்சிகள் தலா 3தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாஜக மற்றும் சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று  மும்பை வருகிறார். இதேபோல்,பிரச்சாரத்திற்காக மராட்டிய மாநிலத்திற்கு இன்று வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஷீரடி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சங்கம்நேர் பகுதியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதனால் மும்பை உள்ளிட்ட 17 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம்உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

Related Posts