மராட்டிய மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 16 வீரர்கள் பலி

மக்களவை தேர்தலில் நடைபெற்ற 4வது கட்ட வாக்கு பதிவையொட்டி  மகாராஷ்டிராவில் உள்ள கட்சிரோளி பகுதியில் அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த சி60 என்ற கமாண்டோ பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒரு பேருந்துஒன்றில் கட்சிரோளி பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கமாண்டோ படையினர் சென்ற வாகனத்தை மாவோயிஸ்டுகள் குறிவைத்து வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலில் 16 வீரர்கள் உயிரிழந்தனர்.. இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  ‘மாவோயிஸ்ட் தாக்குதலில் மரணமடைந்த  கமாண்டோ படை விரர்களுக்கு வீரவணக்கம் எனவும்,  வீரர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது’ எனவும்  கூறியுள்ளார்

Related Posts