மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

      2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு சற்று முன்பு வெளியிடப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் குழுவினர் இதனை வெளியிட்டனர். அதன்படி புற்றுநோய் சிகிச்சைமுறை குறித்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்காவின் ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானின் தஸுக்கு ஹோஞ்சோ ஆகிய இருவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related Posts