மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா முதலிடம்

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சென்னை : ஜூன்-28

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் வெளியிட்டார். அதில், சென்னை மேற்குத் தாம்பரத்தைச் சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். தர்மபுரியைச் சேர்ந்த ராஜ்செந்தூர் அபிஷேக் என்ற மாணவர் இரண்டாம் இடத்தையும், சென்னை தில்லை கங்கா நகரைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவப் படிப்புக்காக 25 ஆயிரத்து 417 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஏற்கப்பட்ட விண்ணப்பங்களில் மாணவர்கள் 10,473 பேர் என்றும், மாணவிகள் 17,593 பேர் எனவும், 3ஆம் பாலினத்தவர் ஒருவர் என்றும் அவர் கூறினார். பொதுப்பிரிவின் கீழ் 28 ஆயிரத்து 67 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாக தெரிவித்த அவர், மருத்துவப் படிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், ஜூலை 1 முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் கூறினார்.

Related Posts