மறு வாக்குப் பதிவின்போது  வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்   கடந்த 18ம் தேதி  நடைபெற்றது.   இதில் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் 248-வது வாக்குச்சாவடியில் போடப்பட்ட 50 மாதிரி வாக்குகளைஅழிக்காமல் அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்து விட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கதிரவனின் பரிந்துரையின்பேரில் காங்கேயம் 248-வது வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் கொல்லம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின்  முகவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கதிரவன் மறு வாக்குப் பதிவின்போது  வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Posts