மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக குறைவாக உள்ளது

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக குறைவாக உள்ளது என்று  சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-27

தமிழக சட்டப்பேரவையில் இன்று, காவல்துறை மானியக்கோரிக்கை மீது பதிலுரை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து வருவதாக தெரிவித்தார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக குறைவாக உள்ளது எனக்கூறிய அவர், கொள்ளையர்கள், வழிப்பறி செய்வோர், கடத்தல்காரர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். தமிழகத்தை அமைதி பூங்காவாக, காவல்துறையினர் காத்து வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்திய அளவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்களின் சதவீதம் குறைவாக உள்ளது எனவும், தமிழகத்தில் பொது அமைதியை பராமரிப்பதில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Related Posts